தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.6 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.6 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 March 2018 2:30 AM IST (Updated: 30 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக துபாய் ஜெபல் அலி துறைமுகத்துக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு ஆட்டோ மொபைல் பொருட்கள் அனுப்புவதாக கூறி ஒரு கன்டெய்னர் வந்தது. இந்த கன்டெய்னரை பெங்களூரை சேர்ந்த ஒருவர் அனுப்பியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

14 டன் செம்மரக்கட்டைகள்

இதில் சந்தேகம் அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கன்டெய்னரில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கன்டெய்னரில் ஆட்டோ மொபைல் பொருட்களுக்கு பதிலாக சுமார் 14 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் செம்மரக்கட்டைகள் பதுக்கப்பட்டு இருந்த கன்டெய்னரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story