கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்பட்டதால் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்


கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்பட்டதால் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 30 March 2018 4:15 AM IST (Updated: 30 March 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேட்டில் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்பட்டதால் செல்போன் கோபுரத்தில் விஷபாட்டிலுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது35). இவர் வாய்மேட்டில் உள்ள அருணாசலம் என்பவரிடம் இருந்து கேபிள் டி.வி. இணைப்பு பெற்று, அந்த பகுதியில் உள்ள 120 வீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்பு கொடுத்து வருகிறார். அதே பகுதியில் பண்டரிநாதன் என்பவரும் கேபிள் டி.வி. இணைப்பு கொடுத்து வருகிறார். இதனால் மாசிலாமணிக்கும், பண்டரிநாதனுக்கும் இடையே தொழில்போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருணாசலம், மாசிலாமணிக்கு கொடுத்துவந்த கேபிள் டி.வி. இணைப்பை துண்டித்துள்ளார்.

தற்கொலை மிரட்டல்

இதனால் மனஉளைச்சல் அடைந்த மாசிலாமணி நேற்று அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, விஷ பாட்டிலை வைத்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு, வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மாசிலாமணியிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறக்குவதற்கு முயன்றனர். ஆனால் மாசிலாமணி, காப்பாற்ற முயன்றால் விஷத்தை குடித்துவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் அதிகாரிகளின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு மாசிலாமணி கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர், அவரை போலீசார் பாதுகாப்பாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். கேபிள் டி.வி. இணைப்பு மறுக்கப்பட்டதால் மன உளைச்சலில் விஷ பாட்டிலுடன் செல்போன் கோபுரத் தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story