சென்னை பல்கலைக்கழக தொலை தூர கல்வி: எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., தேர்வு முடிவு நாளை வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. தேர்வுகளின் முடிவு நாளை வெளியிடப்படுகிறது.
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. (தகவல் தொழில்நுட்பம்) படித்தவர்களுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் முடிவு நாளை (31-ந் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த முடிவை இணையதளத்தில் ( www.ideunom.ac.in ) காணலாம். இதே இணையதளத்தில் மறுமதிப்பீட்டுக்கு ஏப்ரல் 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story