நட்சத்திர ஓட்டலில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு பெண் உள்பட 2 பேர் கைது
நட்சத்திர ஓட்டலில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி ஒரு கும்பல் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரகுமார் குறிப்பிட்ட அந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்.
அங்கு போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்டதாக ஜான் சேவியர் (வயது 38), அவரது பெண் உதவியாளர் வெங்கடேசுவரி (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெரியமேட்டில் உள்ள சண்முகராயன் தெருவில் அவர்களது அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தி 54 போலி பாஸ்போர்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜான்சேவியர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story