மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை கடற்கரை- கொருக்குப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் இரவு 7.55 மணி ரெயில் கடற்கரைக்கும், கும்மிடிப்பூண்டி-கடற்கரை இரவு 9.40 மணி ரெயில் மூர்மார்க்கெட்டுக்கும் செல்லும். வேளச்சேரி-ஆவடி இரவு 10.30 மணி ரெயில் கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் ஆவடி-கடற்கரை காலை 8.45 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-கடற்கரை காலை 8.40 மணி, சூலூர்பேட்டை- கடற்கரை காலை 7.25 மணி ரெயில்கள் மூர்மார்க்கெட் செல்லும். கடற்கரை-அரக்கோணம் அதிகாலை 1.20 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும்.
ரத்து
நாளை மறுநாள் கடற்கரை- பொன்னேரி காலை 5.30, கடற்கரை-திருவள்ளூர் காலை 5.30, 6.15, 9.50, கடற்கரை-அரக்கோணம் காலை 4.20, கடற்கரை-ஆவடி காலை 8.30, 10.30, பொன்னேரி-கடற்கரை காலை 7, ஆவடி-கடற்கரை காலை 4.10, 4.25, 6.05, 7.10, 7.40, அரக்கோணம்-கடற்கரை காலை 4 மணி ரெயில்கள் முழுவதுமாகவும், கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் காலை 9.10 மணி ரெயில் கடற்கரை- ஆவடி இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர்-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் மாற்றுப்பாதையில் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், அரக்கோணம், திருத்தணி வழியாக ரேணிகுண்டா செல்லும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story