மேல்மருவத்தூர் அருகே தண்டாயுதபாணி கோவில் தேரோட்டம்
மரகத தண்டாயுதபாணி சாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த நடுபழனி என அழைக்கப்படும் பெருக்கருணை கிராமத்தில் கனகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மரகத தண்டாயுதபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திரவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் உற்சவர் மரகத தண்டாயுதபாணி சாமி தேரில் எழுந்தருளினார். இதையடுத்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
பின்னர் பஜனை குழுவினர் கனகமலையை வலம் வந்து படி ஏறுதல் மற்றும் அன்னதானமும், இரவில் உற்சவர் சித்தி விநாயகர் கிரிவலம் மற்றும் திருவீதி உலாவும் நடைபெற்றது.
Related Tags :
Next Story