ஏக்நாத் கட்சே எலி ஊழலை நகைச்சுவைக்காக தெரிவித்தார் முதல்-மந்திரி பட்னாவிஸ் விளக்கம்


ஏக்நாத் கட்சே எலி ஊழலை நகைச்சுவைக்காக தெரிவித்தார் முதல்-மந்திரி பட்னாவிஸ் விளக்கம்
x
தினத்தந்தி 30 March 2018 3:30 AM IST (Updated: 30 March 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

எலி ஒழிப்பில் ஊழல் என்று நகைச்சுவைக்காக தான் ஏக்நாத் கட்சே தெரிவித்தார் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்தார்.

மும்பை,

எலி ஒழிப்பில் ஊழல் என்று நகைச்சுவைக்காக தான் ஏக்நாத் கட்சே தெரிவித்தார் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்தார்.

எலி ஊழல்

மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயாவில் எலிகள் ஒழிப்பு பணியில் முறைகேடு நடந்ததாக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஏக்நாத் கட்சே சட்டசபையில் குற்றம் சாட்டினார்.

மும்பை மாநகராட்சி சார்பில் 6 லட்சம் எலிகளை கொல்லும் பணிக்காக 2 ஆண்டுகள் தேவைப் பட்ட தாகவும், ஆனால் மந்திரா லயாவில் வெறும் 7 நாட்களில் 3 லட்சத் துக்கும் மேற்பட்ட எலிகள் கொல்லப் பட்டதாக கூறப் படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் ‘எலி ஊழல்’ என அடை மொழியுடன் சர்ச்சையை ஏற்படு த்தியது.

விஷ மாத்திரைகளின் எண்ணிக்கை

இதை யடுத்து, மந்திரா லயாவில் வெறும் 7 நாட்களில் கொல்லப் பட்டதாக கூறப்படுவது எலிகளின் எண்ணிக்கை அல்ல, அது எலிகளை கொல்வதற்காக வைக்கப்பட்ட விஷ மாத்திரைகளின் எண்ணிக் ்கை என்று சட் டசபையில் அரசு விளக்கம் அளித்தது.

ஆனாலும் எலி ஊழல் பிரச்சிைனயை எதிர்க் கட்சிகள் கைவிடவில்லை. அரசை வசைப்பாடி வந்தன.

நகைச்சுவைக்காக...

இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “என்னுடன் பணியாற்றிய முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே எலிகள் கொல்லப்பட்ட பிரச்சினையை நகைச்சுவை உணர்வுடன் தான் கூறினார். அது இப்படி தீவிரமாகும் என்று தெரியாமல் போய் விட்டது. இது இனியும் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. இதை ஏற்கனவே மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சட்டசபையில் தெளிவுப்படுத்தி விட்டார்” என்றார்.

Next Story