மகளை கொலை செய்துவிட்டு ஆஸ்பத்திரியில் நாடகம் தலைமறைவான இளம்பெண் கைது பீகாரில் சிக்கினார்
மகளை கொலை செய்து விட்டு மயங்கி விழுந்ததாக ஆஸ்பத்திரியில் நாட கமாடி விட்டு தலை மறைவான இளம் பெண்ணை பீகாரில் போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

சிறுமி கொலை
மும்பை கோவண்டியை சேர்ந்த பெண் நதீராசேக் (வயது22). இவரது கணவர் இசாஜ். பீகாரில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். கடந்த 14-ந் தேதி நதீரா சேக் தனது மகள் சாந்தினி (3) மயங்கி விழுந்து விட்டதாக கூறி ராஜவாடி மருத் துவமனையில் அனுமதித்தார்.
பின்னர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி சாந்தினி ஏற்கனவே இறந்து விட்டதும், அடித்து கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதுபற்றி டாக்டர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் இருந்த நதீராசேக்கின் மகனிடம் விசாரணை நடத்தினர். இதில், சகோதரி சாந்தினியை தாய் அடித்து உதைத்ததாக தெரிவித்தான்.
தாய் கைது
இதன் மூலம் நதீரா சேக் தான் மகளை கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் தனது சொந்த ஊரான பீகார் மாநிலத்தில் உள்ள மோட்டிஹரி கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். விசாரணையின் போது, குடும்ப செலவுக்கு கணவர் சரியாக பணம் அனுப்பாத கோபத்தில் இருந்தபோது, உணவு கேட்டு மகள் அழுததால் நதீராசேக் அவளை அடித்து, உதைத் துள்ளர். இதன் காரணமாக சாந்தினி உயிரிழந்து இருக்கிறாள். இதனால் பயந்து போன நதீராசேக் ஆஸ்பத்திரியில் மகள் மயங்கி விழுந்ததாக நாடகமாடியது தெரியவந்தது.
போலீசார் அவரை மும்பை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story