மகாவீர் ஜெயந்தியையொட்டி ஈரோட்டில் வடமாநிலத்தவர்கள் ஊர்வலம்


மகாவீர் ஜெயந்தியையொட்டி ஈரோட்டில் வடமாநிலத்தவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 30 March 2018 3:57 AM IST (Updated: 30 March 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வடமாநிலத்தை சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் சார்பில் ஊர்வலம் நடந்தது.

ஈரோடு, 

மகாவீர் ஜெயந்தி ஈரோட்டில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடமாநிலத்தை சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் சார்பில் ஊர்வலம் நடந்தது. ஈரோடு இந்திராநகரில் உள்ள ஜெயின் கோவிலில் தொடங்கிய ஊர்வலம் ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி வழியாக சென்று மீண்டும் ஜெயின் கோவிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது, உலக அமைதி, மற்ற உயிரை கொல்லக்கூடாது, வன்முறையை கையாளக்கூடாது, பொய் கூறக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டனர்.

இதில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். 

Next Story