காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பெண்ணாடம், கம்மாபுரம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள வடகரை ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, 4 மினிதொட்டிகள் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறுகளின் மின் மோட்டார் திடீரென பழுதானது. மினிகுடிநீர் தொட்டிகளும் சேதமடைந்தது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வது தடைபட்டது. பழுதான மின் மோட்டார்களை சீரமைக்குமாறு ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் வடகரை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலையில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழுதான மின் மோட்டார்கள் மற்றும் சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை சீரமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யவும், ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன கோஷங்கள் போட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக கிராம மக்கள் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேப்போல் கம்மாபுரம் அடுத்த கொக்காம்பாளையத்திலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்ககோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன் விவரம் வருமாறு:-
கம்மாபுரம் அடுத்த பாலக்கொல்லை ஊராட்சிக்குட்பட்ட கொக்காம்பாளையம் கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்ட வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து போனது. இதன் காரணமாக மக்களுக்கு போதிய குடிநீர் வழங்கமுடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை அங்குள்ள பஸ் நிறுத்தம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆலடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story