ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது


ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 30 March 2018 5:06 AM IST (Updated: 30 March 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்துமக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று இந்து மக்கள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், விவசாயத்தை அழிவில் இருந்து பாதுகாக்கவும், உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

மேலும் ரெயில் மறியல் செய்ய கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் அவர்கள் ரெயில்வே நிலையத்திற்கு சென்று ரெயில் மறியலுக்கு முயன்றனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபு, தனிப்பரிவு சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story