லாட்டரி சீட்டுக்கு எதிர்ப்பு: பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
லாட்டரி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்கப் போவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாயின. இந்தநிலையில் லாட்டரிக்கு அனுமதி மறுக்க கோரி பெரியார் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தூக்கு கயிற்றை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அவர்கள் நேற்று காலை மிஷன்வீதியில் உள்ள மாதா கோவில் முன்பு ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
ஊர்வலத்திற்கு திராவிடர் விடுதலை கழக செயலாளர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்திநாத் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அலைகள் இயக்க அமைப்பாளர் பாரதி, உதயகுமார், அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தூக்கு கயிறை கையில் ஏந்தியபடி சென்றனர்.
ஊர்வலம் செஞ்சி சாலை அருகே சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனைதொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story