ஸ்மார்ட் ஜன்னல்கள்
ஒரு பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் வீட்டறையின் ஜன்னல் ஓர் அகன்ற தொலைக்காட்சித் திரையாக மாறுவதாகக் கற்பனை செய்து பாருங்கள். இதெல்லாம் சாத்தியமா என்ற சந்தேகம் வருகிறதா? ஆனால், வருங்காலத்தில் இது ஸ்மார்ட் ஜன்னல் மூலம் சாத்தியமாகக்கூடும்.
ஸ்மார்ட் ஜன்னல் என்பது வை-பை மூலம் இணைக்கப்பட்ட, காரணிகளைப் பொறுத்து நிறம் மாறும் தன்மைகொண்ட கண்ணாடி ஜன்னல். இது எல்லா வீடுகளிலும் வருங்காலத்தில் இருக்கப்போகும் புதிய பயனுள்ள தொழில்நுட்பம். இந்த கண்ணாடியில் உள்ள உணரும் தன்மை கொண்ட சென்சார்கள், அறையில் உள்ளே உள்ள பொருட்கள், ஆட்களின் எண்ணிக்கை, வெளியே உள்ள வெப்பநிலை, சூரிய ஒளி போன்றவற்றை உணர்ந்து அதற்கேற்ப கண்ணாடியின் நிறத்தை மாற்றிக்கொள்ளும், அதாவது நீங்கள் ஜன்னலைச் சாத்தவோ திரையால் மூடவோ தேவையில்லை.
கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இந்த உயர் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் ஜன்னல் மலிவு விலையில் கிடைப்பது இல்லை. சாதாரண ஜன்னலுக்கு ஆகும் செலவைவிட 50 சதவீதம் அதிகச் செலவு பிடிக்கும். அதேசமயம், இது வீட்டினுள் நுழையும் வெப்பத்தைத் தடுப்பதால், ஏசி உபயோகம் வெகுவாகக் குறையும். இதன் மூலம் மாத மின் கட்டணத்தில் 20 சதவீதம் வரை சேமிக்கலாம்.
இதில் இடம் பெறும் டைனமிக் கிளாஸ் என்ற ஸ்மார்ட் கண்ணாடி, சந்தையில் மிகவும் நன்கு அறியப்பட்ட நவீன கண்ணாடியாகும். இந்தக் கண்ணாடிகளின் நிறமாற்றத்தை வை-பை மூலம் கட்டுப்படுத்தலாம். இது ஒரு வகையில் சொகுசுக் கண்ணாடி. இந்த நிறமாற்றத்தை, ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் கைபேசியில் உள்ள ஆப்களின் மூலம் தூண்டலாம். கண்ணாடியின் அளவைப் பொறுத்து இதன் விலை மாறும். சுமாராக சதுர அடிக்கு 6,500 ரூபாய் வரை செலவு பிடிக்கும். எல்லோராலும் மிகுந்த பொருட்செலவில் உயர் தொழில்நுட்பம் கொண்ட டைனமிக் கண்ணாடியை வீட்டில் நிறுவ முடியாது. ஆனால், செலவு அதிகம் பிடிக்காத ‘சொன்டே’ பிலிமைப் பயன்படுத்தலாம். இதை ஒரு மின்னணுத் திரை என்றும் சொல்லலாம். இந்தத் திரையை ஏற்கனவே உள்ள உங்கள் வீட்டுக் கண்ணாடி ஜன்னலின் மீது ஒட்ட முடியும்.
இதுவும் வை-பை மூலம் நிறமாற்றத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வசதியைக் கொண்டது. இந்தத் திரை, ஒளிஊடுருவும் தன்மையுள்ள உங்கள் கண்ணாடி ஜன்னலை, தன் நிறமாற்றும் இயல்பு மூலம் ஒளிஊடுருவ முடியாத தன்மையுள்ளதாக மாற்றுகிறது. இந்த ஒட்டும் திரையை வாங்குவதற்கு முன், அதன் மாதிரிக் கருவிகளை வாங்கி உபயோகித்துப் பார்த்து, அதில் உங்களுக்குப் பிடித்த வண்ண மாதிரியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பொதுவான வீட்டுப் பராமரிப்பு வேலைகளைப் போல், இந்த ஸ்மார்ட் ஜன்னலுக்கு ஆகும் செலவும் உபயோகிக்கும் பொருளின் தரத்தைப் பொருத்து பெரிதும் மாறும்.
ஸ்மார்ட் கண்ணாடியா ஸ்மார்ட் திரையா என்பதை உங்கள் பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மின்சேமிப்பைப் பொறுத்தவரை இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இந்த ஸ்மார்ட் ஜன்னலுக்கு ஆகும் செலவை, செலவு என்று பார்க்காமல் முதலீடு என்று பார்த்தால் மின்கட்டணத்தைக் குறைக்கலாம். இனி வரும் காலங்களில் இதன் உபயோகம் பரவலாகும்போது, இதன் விலை குறைவதற்கும் வாய்ப்பு அதிகம்.

Related Tags :
Next Story