நெல்லையில் விசாரணை கைதி மர்மச்சாவு போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
நெல்லையில் விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார். அவரை போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள்.
நெல்லை,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருட்டு வழக்கு
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கோடாரங்குளத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் முருகேசன் (வயது 26). இவர் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் நெல்லை அருகே உள்ள மருதூரில் வசித்து வந்தார். இவரது கூட்டாளி பாளையங்கோட்டை அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த மாணிக்கராஜா (24).
இவர்கள் 2 பேரும் சமீபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடிவந்தனர்.
சாவு
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, அங்கு வந்த முருகேசன், மாணிக்கராஜா ஆகியோரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தங்க சங்கிலியை வாங்கியதாக மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியைச் சேர்ந்த செல்லப்பா மனைவி கண்ணம்மா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் முருகேசன், மாணிக்கராஜா ஆகியோரை விசாரணைக்காக சிவந்திபட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை, 2 செல்போன்கள், மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் சிறையில் அடைப்பதற்காக போலீசார் தயார்படுத்திக் கொண்டு இருந்தனர்.
அப்போது, திடீரென்று 2 பேருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு முருகேசன் பரிதாபமாக இறந்தார். மாணிக்கராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உறவினர்கள் குற்றச்சாட்டு
இதுகுறித்து தகவல் அறிந்த முருகேசன் குடும்பத்தினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்கியதால் முருகேசன் இறந்து விட்டதாக குற்றம் சாட்டினார்கள். மேலும் அவரது கால் முறிந்து இருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக நெல்லை கோர்ட்டு நீதிபதி இன்று (சனிக்கிழமை) விசாரணை நடத்த உள்ளார். இறந்த முருகேசனுக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சிவந்திபட்டி போலீசார் தரப்பில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட முருகேசன் மற்றும் மாணிக்கராஜா ஆகியோரை சுற்றி வளைத்த போது விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். அவர்களை நாங்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம் என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story