திருட்டுத்தனமாக மது விற்ற 16 பேர் கைது
மதுபாட்டில்களை பதுக்கி திருட்டுத்தனமாக விற்ற 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
மகாவீர் ஜெயந்தி அன்று அனைத்து மதுக்கடைகளையும் கண்டிப்பாக மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தியான நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு. ராஜேந்திரன் தலைமையில் போலீசார் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளைம், பொன்னேரி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை போன்ற பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார்கள்.
அப்போது மதுபாட்டில்களை பதுக்கி திருட்டுத்தனமாக விற்று கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 428 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story