புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை


புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை
x
தினத்தந்தி 31 March 2018 2:21 AM IST (Updated: 31 March 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

புனித வெள்ளியையொட்டி நெல்லையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

நெல்லை,

புனித வெள்ளியையொட்டி நெல்லையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனிதவெள்ளி

கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கத்தோலிக்க ஆலயங்களில் இரவு திருப்பலி, முதியோர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. சி.எஸ்.ஐ. ஆலயங்களில் பெரிய வியாழன் நற்கருணை ஆராதனை நடந்தது.

தவக்காலத்தின் முக்கிய நிகழ்ச்சியான புனித வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் ஆலயத்தில் பகல் முழுவதும் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. மாலையில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. அப்போது பாளையங்கோட்டை சவேரியார் ஆலயம் அருகில் ஏசுவின் கடைசி காலத்தை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சி.எஸ்.ஐ. ஆலயம்

இதேபோல் பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ. கதீட்ரல் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி நேற்று மதியம் மும்மணி தியான ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடைபெறுகிறது.

பாளையங்கோட்டை சாந்திநகர் குழந்தை ஏசு ஆலயத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை வரை மவுன ஆராதனை நடந்தது. 10 மணிக்கு ரத்ததான முகாம் நடந்தது. இதை பிஷப் ஜூடுபால்ராஜ் தொடங்கி வைத்தார். ஏராளமான இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்தப்பிரிவு குழுவினர் டாக்டர் எஸ்தர் தலைமையில் ரத்தம் சேகரித்து சென்றனர்.

இந்த ரத்ததான முகாமில் பங்கு தந்தை விசுவாச ஆரோக்கியராஜ், துணை தலைவர் தார்சிஸ், இணை செயலாளர் ஸ்டெல்லா, பொருளாளர் சந்தானராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story