பெங்களூருவில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன


பெங்களூருவில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன
x
தினத்தந்தி 31 March 2018 3:00 AM IST (Updated: 31 March 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

பெங்களூரு,

பெங்களூருவில், சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

ஆலங்கட்டி மழை

பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. நேற்று மதியம் வரை வெயில் இருந்தது. ஆனால் மதியத்திற்கு பிறகு வானில் கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசியது. பின்னர் மதியம் 3 மணியளவில் பெங்களூரு நகரில் சூறைக்காற்று வீசியது.

பெங்களூரு புறநகர் நெலமங்களா, ஆனேக்கல் பகுதிகளில் சூறைக்காற்றுடன், கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் ஆலங்கட்டி மழையும் பெய்தது. அந்த பகுதிகளில் விழுந்து கிடந்த ஆலங்கட்டிகளை எடுத்து சிறுவர்கள் விளையாடினார்கள். பெங்களூரு நகரில் நேற்று இரவு 11 மணி அளவில் பயங்கர இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.

மரங்கள், மின்கம்பங்கள்...

பெங்களூருவில் சூறைக்காற்று வீசியதால் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அருகே நின்ற ஒரு மரமும், மின்கம்பமும் சாய்ந்து விழுந்தன. இதில், ஒரு கார், ஆட்டோ சேதம் அடைந்தது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபோல, பழைய விமான நிலைய ரோடு, வித்யாரண்யபுரா, கே.ஆர்.புரத்தில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story