தேர்தலில் ஓட்டுப்போட்டால் வணிக வளாகங்களில் 5 சதவீத தள்ளுபடி வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பெங்களூரு மாநகராட்சி புதிய முயற்சி
வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பெங்களூரு மாநகராட்சி புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது தேர்தலில் ஓட்டுப்போட்டால் வணிக வளாகங்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு,

2 நாட்கள் விடுமுறை
கர்நாடக சட்டசபைக்கு மே 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மே 12-ந் தேதி சனிக்கிழமை தினத்தில் வருகிறது. அதற்கு அடுத்த நாள் ஞாயிறு பொதுவிடுமுறை தினமாகும். எனவே, ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில் பொது விடுமுறை என்பதால், தொடர்ச்சியாக 2 நாட்கள் விடுமுறை வருகின்றன.
பெங்களூருவில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் அவர்கள் ஊருக்கு செல்ல முன்கூட்டியே திட்டமிடுவார்கள். அவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் ஓட்டுப் பதிவு சதவீதம் மிக குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
5 சதவீத தள்ளுபடி
இந்த நிலையில் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பவர்களுக்கு பெரிய வணிக வளாகங்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்குவது குறித்து பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக விவாதிக்க பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் வணிக வளாகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். வாங்கும் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்குவதன் மூலம் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கருதுகிறார்.
இந்த கூட்டத்தில் இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பெங்களூருவில் 57 சதவீதமும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 52 சதவீதமும் ஓட்டுகள் பதிவாயின. எப்போதுமே பெங்களூருவில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக இருப்பது வழக்கமாகிவிட்டது. இந்த ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரு மாநகராட்சி புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

Related Tags :
Next Story