நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு முதல்-மந்திரியின் உத்தரவின் பேரில் அரசு மரியாதை செய்யப்பட்டது அதிகாரிகள் விளக்கம்


நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு முதல்-மந்திரியின் உத்தரவின் பேரில் அரசு மரியாதை செய்யப்பட்டது அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 31 March 2018 3:30 AM IST (Updated: 31 March 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு முதல்-மந்திரியின் உத்தரவின் பேரில் அரசு மரியாைத செய்யப்பட்டது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

மும்பை,

நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு முதல்-மந்திரியின் உத்தரவின் பேரில் அரசு மரியாைத செய்யப்பட்டது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

உடலுக்கு அரசு மரியாைத

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ந் தேதி துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தார். பின்னர் அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு மூவர்ண கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்ரீதேவி உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டதற்கு மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கண்டனம் தெரிவித்தார். ஸ்ரீதேவி பெரிய நடிகையாக இருந்தாலும், அவர் நாட்டுக்கு என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்கலி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு இருந்தார்.

அதிகாரிகள் விளக்கம்

இதற்கு மராட்டிய அரசின் பொது நிர்வாகத்துறை அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், “நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு அரசு மரியாதை செய்தது பற்றி முதல்-மந்திரியின் அலுவலகத்தில் இருந்து வாய்மொழியாக உத்தரவு வந்தது. அந்த உத்தரவு மும்பை புறநகர் கலெக்டர், மும்பை போலீஸ் கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டு அரசு மரியாைத செய்யப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளில், சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரே, முன்னாள் மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் உள்பட 41 பேரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதுகுறித்து மராட்டிய அரசின் தகவல் துறை டைரக்டர் ஜெனரல் கூறியதாவது:-

யார்-யாரின் உடலுக்கு எல்லாம் அரசு மரியாதை செய்யலாம் என்று விதிமுறை வகுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் இடம்பெறாத கண்ணியமிக்கவர்களுக்கு அரசு மரியாதை செய்ய உத்தரவிட முதல்-மந்திரிக்கு தன்னிச்சையான அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கும் முதல்-மந்திரி தனது தன்னிச்சையான அதிகாரத்தை பயன்படுத்தி அரசு மரியாதை செய்ய சொல்லி உத்தரவிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story