முதல்-மந்திரி அறிவிப்பின்படி 72 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படுமா? சிவசேனா கேள்வி
முதல்-மந்திரியின் அறிவிப்பின்படி 72 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படுமா? என்பது பற்றி சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:-
72 ஆயிரம் பேருக்கு...
பா.ஜனதா 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால் எத்தனை பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை. கடன் தள்ளுபடி தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அறிவிப்புகள் அமலுக்கு வரவில்லை.
இந்த நிலையில் புதிதாக 72 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் அறிவித்து உள்ளார். இதில் முதல்கட்டமாக 36 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்புகள் பற்றிய விவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டம்
மராட்டியத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. புதிய வேலைவாய்ப்புகள் நடைபெற உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளனவா?. அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் புதிய வேலைவாய்ப்புகளை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள். நீங்கள் அறிவித்து உள்ள வேலைவாய்ப்புகளை வழங்கினாலும், இன்னும் வேலையில்லாமல் திண்டாடுபவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story