மும்பை கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தி பரவசம்
மும்பையில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மும்பை,

பங்குனி உத்திர திருவிழா
மும்பையில் தமிழர்கள் நிர்வகிக்கும் கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடபட்டது.
மும்பை மலாடு மேற்கு, ஒர்லம், சிவகாமி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் மார்வே கடற்கரைக்கு சென்று அங்கிருந்து காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அலகு குத்தி தேர் ஊர்வலம் நடந்தது.
செம்பூர் செட்டாநகர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. முல்லுண்டில் உள்ள ஓம்சக்திவேல் முருகன் கோவிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அரோகரா கோஷம் முழங்க அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் தேர் பவனி நடந்தது. இந்த கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செட்டா நகர் முருகன் கோவிலில் தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மும்பை கிளை மற்றும் மும்பை ம.தி.மு.க. சார்பில் பக்தர்களுக்கு இலவச நீர், மோரும், முல்லுண்டில் காமராஜர் மன்றத்தின் சார்பில் ஐஸ் கிரீமும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சில் மும்பை கிளை தலைவர் தமிழழகன், ஆலோசகர் நடராஜன் மராட்டிய மாநில மன்ற செயலாளர் ஹரிராம் சேட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாஸ்தா கோவில்கள்
வடலா சக்தி வேல் முருகன் கோவில், மாட்டுங்கா ஆஸ்திக சமாஜ், மாட்டுங்கா பூ மார்க்கெட் அருகேயுள்ள முருகன் கோவில் மற்றும் திலக்நகர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோன்று மும்பையில் தமிழர்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளான தாராவி, செம்பூர், ரே ரோடு, டோம்பிவிலி, அம்பர்நாத், வில்லேபார்லே, அண்டாப்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடந்தது.
இதுதவிர தாராவியில் உள்ள பூலுடையார் சாஸ்தா, தென்கரை மகாராஜன் சாஸ்தா, கருமேனி சாஸ்தா, கருப்ப சாஸ்தா மற்றும் ஆனைமலை ஐயர் சாஸ்தா உள்ளிட்ட கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story