ஈரோடு ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் சாவு யார் அவர்? போலீஸ் விசாரணை


ஈரோடு ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் சாவு யார் அவர்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 31 March 2018 3:55 AM IST (Updated: 31 March 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்து முதியவர் இறந்தார்.

ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடை பகுதியில் சுமார் 60 வயது மதிக்கக்கத்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவரை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இறந்தவர் ஊதா மற்றும் கருப்பு நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், சந்தன நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story