நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் விபத்தில் சிக்கி பலி 2 நண்பர்களும் உயிரிழந்த பரிதாபம்


நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் விபத்தில் சிக்கி பலி 2 நண்பர்களும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 31 March 2018 4:00 AM IST (Updated: 31 March 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார். உடன் சென்ற 2 நண்பர்களும் உயிரிழந்தனர்.

அவுரங்காபாத்,

நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார். உடன் சென்ற 2 நண்பர்களும் உயிரிழந்தனர்.

பத்திரிகை கொடுக்க சென்றார்

அவுரங்காபாத் மாவட்டம் சில்லாத் தாலுகா சிவானா கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் ஏக்நாத் ஜக்தப் (வயது 22). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழழை) புல்தானா மாவட்டம் ஜம்தி கிராமத்தை சேர்ந்த பெண்ணை மணக்க இருந்தார்.

திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்த நிலையில் ராகுல் ஏக்நாத் ஜக்தப் தனது நண்பர்களான ஜிதேந்திரா (22), ராகுல் சதாசிப் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்க சென்றார். பத்திரிகை கொடுத்து விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

3 பேரும் பலி

போகர்தான்-சில்லாத் சாலையில் மல்கேதா கிராமம் அருகே வந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில் இரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் ராகுல் ஏக்நாத் ஜக்தப், அவரது நண்பர்கள் ஜிதேந்திரா, ராகுல் சதாசிப் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் ராகுல் ஏக்நாத் ஜக்தப் மற்றும் நண்பர்கள் 2 பேர் உயிரிழந்ததால் சிவானா கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story