கோவில் சுற்று சுவரை இடிக்க கோரி சந்தையூர் மலைப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர் சாவு
கோவில் சுற்று சுவரை இடிக்க கோரி சந்தையூர் மலைப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர் மாரடைப்பால் இறந்தார்.
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள சந்தையூர் இந்திராகாலனியில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ள கோவில் சுற்று சுவரை அகற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் கடந்த 61 நாட்களாக அங்கு உள்ள மலைப்பகுதியில் குடும்பம் குடும்பமாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தினால் பள்ளி குழந்தைகள் படிக்க செல்வதில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசின் அனைத்து உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியும், தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை ஊருக்குள் வரமாட்டோம் என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பழனிமுருகன் (வயது 42) என்பவருக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக அவரை பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து பழனிமுருகன் உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story