திருநள்ளாறில் துணிகரம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி, 2 பேர் கைது
திருநள்ளாறில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலை வீசிதேடிவருகின்றனர்.
காரைக்கால்,
திருநள்ளாறு மேலவீதியில் ஒரு தேசிய வங்கி கிளையின் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன் தினம் அதிகாலை 2 பேர் நுழைந்து, எந்திரத்தின் கதவை இரும்புக்கம்பியால் உடைத்தனர். பின்னர், அதில் இருந்த பணப்பெட்டியை திறக்க முயற்சித்தபோது, ஏ.டி.எம். மையத்தின் வெளிப்புறம் இருந்த அலாரம் ஒலித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே நின்று கொண்டு யாராவது வருகிறார்களா என நோட்டமிட்ட 3-வது நபரும் அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த கொள்ளை முயற்சி குறித்து வங்கி மேலாளர் அனிதா திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில், இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்கள் 2 பேரின் புகைப்படத்தை, வலைதளங்களில் வெளியிட்டும், மற்ற போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தும் தேடிவந்தனர்.
இந்தநிலையில், வலைதளங்களில் கொள்ளையர்களின் புகைப்படத்தை பார்த்த சிலர், நேற்றுகாலை திருநள்ளாறு சுரக்குடி பஸ்நிலையத்தில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், திருநள்ளாறு பேட்டையைச் சேர்ந்த அகோரம் மகன் அன்பழகன்(வயது 24), அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் கணேஷ்(26) ஆகியோர் என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர் திருநள்ளாறு மணல்மேட்டைச்சேர்ந்த சக்திவேல்(32) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பிடிபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். சக்திவேலை தொடர்ந்து தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story