ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தூத்துக்குடியில் 4–ந்தேதி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தூத்துக்குடியில் 4–ந்தேதி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 April 2018 3:00 AM IST (Updated: 1 April 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வருகிற 4–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வருகிற 4–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மாலையில் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்த இந்த கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பெருமாள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி, தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 4–ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி– பாளையங்கோட்டை ரோட்டில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story