ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி
நம்பெருமாள் தங்க கருட வாகனம், சேஷ வாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 5.45 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோ ரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.
வடம் பிடித்து இழுத்தனர்
பின்னர் காலை 8.55 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நான்கு சித்திரை வீதிகளில் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் வீதிகளில் நின்றும், வீட்டு மாடிகளில் நின்றும் தேரோட்டத்தை கண்டுகளித்தனர்.
தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து காலை 11.50 மணிக்கு அதன் நிலையை அடந்தது. அப்போது தேரின் முன்பு பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.
ஆளும் பல்லக்கு
விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரத்தினவேலு மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story