ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயக விரோதம் திருநாவுக்கரசர் பேட்டி
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயக விரோத போக்காகும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சுரண்டை,

திருநாவுக்கரசர் வருகை
நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் இல்ல திருமண விழாவில் குத்தாலிங்கம்– தனலட்சுமி தம்பதியரை வாழ்த்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று மாலை சுரண்டைக்கு வந்தார். பின்னர் மணமக்களை சந்தித்து வாழ்த்தினார்.
முன்னதாக, சுரண்டை நகர காங்கிரஸ் மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் காய்கனி மார்க்கெட் முன்பு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுரண்டை நகர முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.கே.எஸ்.தங்கசாமி நாடார் நினைவு கொடி கம்பத்தில் கொடியேற்றினார்.
பேட்டி
பின்னர் நிருபர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:–
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்சநீதிமன்றம் 4 வார கால அவகாசம் கொடுத்துள்ளது. 25 ஆண்டுகள் கால போராட்டத்தின் முடிவில் கிடைக்கப் பெற்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு நீதிமன்றத்தை அவமதித்து, நீதிமன்றத்தின் கவுரவத்தை குறைத்துவிட்டது.
தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது மிகவும் கண்டனத்துக்கு உரியது. நீதிமன்றம் கொடுத்த 4 வார கால அவகாசத்தில் ஸ்கீம் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கிறது. இது மாபெரும் தவறு, அநீதியாகும்.
ஜனநாயக விரோத போக்கு
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அமைப்பு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் வருவதை வரவேற்கிறேன். நானும், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஸ்டெர்லைட் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மக்களுக்காகத்தான் திட்டங்களை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் திட்டங்களுக்காக மக்களை அடைக்க முயற்சிப்பது அநீதியாகும். 45 நாட்களுக்கு மேலாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயக விரோத போக்காகும்.
போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் குழு அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு, கெயில் வாயு போன்ற திட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள், பொதுமக்கள் தங்களை வருத்திக் கொள்வது அதற்கு தீர்வு ஆகாது. ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
கூட்டுறவு தேர்தலில் முறைகேடு
தமிழக அரசு கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவதை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால் அதில் தற்போது முறைகேடுகள் நடக்கிறது. மாற்றுக்கட்சியினர் வேட்புமனுத்தாக்கல் செய்ய மறுக்கப்படுகிறார்கள். அப்படியே அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தாலும், அவை நிராகரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து கூறியுள்ளேன். தேர்தல் என்பது வெறும் கண்துடைப்பாக இல்லாமல் ஜனநாயக முறைப்படி இருக்க வேண்டும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

Related Tags :
Next Story