தமிழ் ஆர்வலர்கள்-இளைஞர்கள் ஊர்வலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்


தமிழ் ஆர்வலர்கள்-இளைஞர்கள் ஊர்வலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடியில் தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள் ஊர்வலம் நடந்தது.

மன்னார்குடி,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மன்னார்குடியில் இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் ஒருங்கிணைந்து ஊர்வலம் நடத்தினர். அப்போது மன்னார்குடி தேரடியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடைத்தெரு, காந்தி ரோடு வழியாக உதவி கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. அங்கு அவர்கள் தமிழகத்தின் உரிமையை காக்க காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் பாரதிசெல்வன், மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் பாரதிஜீவா, செயலாளர் ஆனந்த், மன்னார்குடி வட்டார லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராஜ்குமார், பொருளாளர் செந்தில்குமார், மன்னார்குடி ரோட்டரி சங்க தலைவர் ரெத்தினசபாபதி, செயலாளர் ஜெயகுமார், சமூக ஆர்வலர் ரமேஷ், ஜேசீஸ் சங்க நிர்வாகி ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story