ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுமி உள்பட 2 பேர் பலி சுரண்டை அருகே பரிதாபம்


ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுமி உள்பட 2 பேர் பலி சுரண்டை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 1 April 2018 2:00 AM IST (Updated: 1 April 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சுரண்டை,

சுரண்டை அருகே ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள நெடுவயல் ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கணேசமூர்த்தி (வயது 29). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களான மதியழகன் (20), சுரேஷ்குமார் (18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சிவகிரியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சுரண்டை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, எதிரே ஒரு ஆட்டோ வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் கணேசமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சிறுமி சாவு

ஆட்டோவில் வந்த கடையாலுருட்டியை சேர்ந்த கணேசன் (48), அவருடைய மகன் மதன் (11), மகள் மேகலா (10) மற்றும் சீனியம்மாள் (60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களில் மேகலா மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேகலா நேற்று காலையில் பரிதாபமாக இறந்தாள்.

இந்த விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story