தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு பெருகுகிறது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு
தூத்துக்குடி அருகே அ.குமரெட்டியபுரம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி 48-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழ் படைப்பாளிகள் கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுகிர்தாராணி, ராஜேந்திரன், பேராசிரியர் சரசுவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி
நேற்று மாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி தலைமையில் மாவட்ட பொருளாளர் மைதீன்கனி, செயற்குழு உறுப்பினர் காதர் முகைதீன் மற்றும் கட்சியினர் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து தெகலான் பாகவி மக்களிடையே பேசும்போது, ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் சுற்றுப்புற மாசு அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்களை பாதுகாக்க இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறினார்.
மோட்டார் சைக்கிள் பேரணி
இதேபோன்று நெல்லை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜாகிர், ராஜகோபால் ஆகியோர் தலைமையில் 60 பேர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மோட்டார் சைக்கிள்களில் நெல்லையில் இருந்து பேரணியாக வந்தனர். மாலையில் அவர்கள் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Tags :
Next Story