அச்சரப்பாக்கம் அருகே எரி சாராயம் பதுக்கிய பெண் கைது
அச்சரப்பாக்கம் அருகே எரிசாராயம் பதுக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கரசங்காலில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், ஒரத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் கரசங்கால் கிராமத்தில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர்.
பெண் கைது
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 55 கேன் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மாலா (வயது 25) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக விமல்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story