விழுப்புரம் அருகே கோவிலில் விளக்கு ஏற்றியபோது தீயில் கருகி சிறுமி சாவு


விழுப்புரம் அருகே கோவிலில் விளக்கு ஏற்றியபோது தீயில் கருகி சிறுமி சாவு
x
தினத்தந்தி 1 April 2018 3:00 AM IST (Updated: 1 April 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கோவிலில் விளக்கு ஏற்றியபோது தீயில் கருகி சிறுமி இறந்தாள்.

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் மகள் சாதனா (வயது 5).

சம்பவத்தன்று சிறுமி சாதனா, தனது உறவினர்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்றாள். அங்கு கோவில் முன்பு சாதனா அகல்விளக்கு ஏற்றினாள். அப்போது, எதிர்பாராதவிதமாக அவளது ஆடையில் தீப்பிடித்தது.

உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் சிறுமி சாதனா பலத்த காயமடைந்தாள். வலியால் அலறி துடித்த அவளை, உறவினர்கள் மற்றும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக வளவனூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சாதனா பரிதாபமாக இறந்தாள்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story