பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளை கடத்தி மீண்டும் விற்பனை செய்ய முயற்சி: நடவடிக்கை எடுக்க சிறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கோத்தகிரி அருகே பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளை கடத்தி மீண்டும் விற்பனை செய்ய முயற்சி நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி கட்டபெட்டு அருகே உள்ள பனஹட்டி, கக்குச்சி கிராம பகுதிகளில் சுமார் 2 லட்சம் கிலோ சாயம் கலந்த கலப்பட தேயிலை தூள் அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் கலப்பட தேயிலை தூளை அழிக்காமல் அதிகாரிகளுக்கு தெரியாமல் லாரிகள் மூலம் கடத்தி வெளி மாநிலங்களுக்கு மீண்டும் விற்பனைக்கு கொண்டு செல்வதாக அந்த பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் ஐ. போஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
உற்பத்தி நிலையிலேயே தேயிலை தொழிற்சாலைகள் சாயம் கலந்து தயாரித்த தேயிலை தூளை ஆய்வக சோதனை மூலம் கண்டறிந்து 2 லட்சம் கிலோ தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தந்த தொழிற்சாலை வளாகத்திலேயே கலப்பட தேயிலை தூளை அழிக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் இந்திய தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் அதிகாரிகள் மேற்பார்வையில் கலப்பட தேயிலை தூளை அழிக்கும் பணி நடைபெற்று வந்தாலும் இப்பணி மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி கொண்டு அதிகாரிகளுக்கு தெரியாமல் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் அழிக்கப்படாத கலப்பட தேயிலை தூளை வெளிமாநிலத்துக்கு கடத்திச்சென்று மீண்டும் விற்பனை செய்ய முயற்சி செய்கிறார்கள்.
இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் சங்கத்துக்கு புகார் அளித்து வருகின்றனர். இதனால் அதிகாரிகள் பெரும் முயற்சியால் பறிமுதல் செய்யப்பட்ட சாயம் கலந்த தேயிலை தூள் மீண்டும் சந்தைக்கு விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அதிகாரிகள் நடவடிக்கை வீணாகி போகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலப்பட தேயிலை தூளை அழிக்கும் பணியை துரிதப்படுத்தி விரைந்து கலப்பட தேயிலை தூளை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story