பெண்ணாடம் அருகே, சொத்து தகராறில் விவசாயி மனைவி அடித்து கொலை
பெண்ணாடம் அருகே சொத்து தகராறில் விவசாயி மனைவியை அடித்து கொலை செய்து, குடிசைக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள கணபதிகுறிச்சியை சேர்ந்தவர் ராஜமாணிக் கம் (வயது 82) விவசாயி. இவரது தம்பி ராமசாமி(62) பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். அண்ணன்- தம்பியான இவர்களின் வீடுகளுக்கு நடுவில் உள்ள பகுதியை சொந்தம் கொண்டாடுவதில் இருவருக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. அவ்வப்போது தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக இரு குடும்பத்திருக்கும் இடையே தகராறு நடந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்துசென்றனர்.
பின்னர் இரவு ராஜமாணிக்கம், அவரது மனைவி ராஜாத்தியம்மாள்(75), மகன் தேவேந்திரன், இவரது மனைவி தேவி(40), மகள் தேஜா(14) ஆகிய 4 பேரும் குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது ராமசாமியின் மகன் பச்சையப்பன்(25) உருட்டு கட்டையுடன் திடீரென உள்ளே புகுந்து அவர்களை சரமாரியாக தாக்கினார். மேலும் குடிசைக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். தாக்குதலில் தேவேந்திரன் லேசான காயத்துடன் தப்பினார். மற்ற 4 பேரும் படுகாயத்துடன் வலி தாங்க முடியாமல் கத்தினர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து குடிசையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ராஜமாணிக்கம், அவரது மனைவி ராஜாத்தியம்மாள், மருமகள் தேவி, பேத்தி தேஜா ஆகிய 4 பேரையும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜாத்தியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் ராஜமாணிக்கம், தேவி, தேஜா ஆகிய 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய பச்சையப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story