காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: தமிழக மக்களின் நலனுக்காக பதவியை ராஜினாமா செய்யத் தயார் - கோவை எம்.பி.நாகராஜன் தகவல்
‘காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக பதவியை ராஜினாமா செய்யத் தயார்’ என்று கோவை எம்.பி. ஏ.பி.நாகராஜன் கூறினார்.
கோவை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து கோவை எம்.பி.யான ஏ.பி.நாகராஜன் கூறியதாவது:-
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சையில் காவிரி தண்ணீர் இல்லாமல் நெல்உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது தஞ்சைக்கு மட்டும் வந்த பிரச்சினை இல்லை. தமிழகத்துக்கே வந்த பிரச்சினை. காவிரி வறண்டால் தமிழகத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும். தமிழகம் இன்னொரு சோமாலியாவாக மாறும். காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போது அமைக்காவிட்டால் எப்போதுமே அமைக்க முடியாது.
எனவே காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி மார்ச் மாதம் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து அவையை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடக தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை புறக்கணித்து வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இல்லையென்றால் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை தமிழக மக்களின் நலனுக்காக ராஜினாமா செய்யத் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story