வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட்டை முடக்க முடியாது: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட்டை முடக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நானும், என்னுடைய தம்பியும் மானூர் கிளை அரசு வங்கியில் கல்விக்கடன் பெற்றிருந்தோம். இந்த கடனை முறையாக செலுத்தவில்லை என்று கூறி எங்கள் வீட்டை ஏலம் விடும் நடவடிக்கையில் வங்கி ஈடுபட்டது. இதுகுறித்து கடன் வசூல் தீர்ப்பாயத்தில் இடைக்கால உத்தரவு பெற்றுள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது எனக்கு வேலை கிடைத்துள்ளது. நான் மாதந்தோறும் முறையாக கடன்தொகையை செலுத்தி வருகிறேன். இதற்கிடையே என்னுடைய பாஸ்போர்ட்டை முடக்கக்கோரி மதுரை மண்டல அலுவலகத்திற்கு வங்கி தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வங்கிக்கு அதிகாரம் இல்லை. எனவே வங்கி அதிகாரியின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “பாஸ்போர்ட் சட்டத்தின் 10-வது பிரிவின்படி இதுபோன்ற நடவடிக்கைகளில் வங்கி ஈடுபட முடியாது” என்று வாதாடினார்.
வங்கி சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். அவர் வங்கிக்கு ரூ.12 லட்சத்து 86 ஆயிரத்து 516 செலுத்த வேண்டும். இவருடைய தம்பி ரெயில்வேயில் பணியாற்றுகிறார். ஆனாலும் அவர்கள் வங்கியில் வாங்கிய கடன் நிலுவையில் உள்ளது என்று வாதாடினார்.
பின்னர் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, “வங்கி அதிகாரியிடமிருந்து இதுபோன்ற எந்த வேண்டுகோளும் இதுவரை பெறப்படவில்லை. ஒருவேளை கிடைத்தாலும், முறையாக மனுதாரர் தரப்புக்கு நோட்டீஸ் கொடுத்த பின்னர் தான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
வாராக்கடன் வசூலிப்பதில் குறை இருந்தால் வேறுவகையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பாஸ்போர்ட்டை முடக்குவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. எனவே இதுதொடர்பான வங்கி அதிகாரியின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story