சட்டவிரோதமாக 8 கனிம நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாக முதல்-மந்திரி சித்தராமையா மீது சி.பி.ஐ.யில் புகார்


சட்டவிரோதமாக 8 கனிம நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாக முதல்-மந்திரி சித்தராமையா மீது சி.பி.ஐ.யில் புகார்
x
தினத்தந்தி 1 April 2018 3:00 AM IST (Updated: 1 April 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக 8 கனிம நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாக முதல-மந்திரி சித்தராமையா மீது சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

சட்டவிரோதமாக 8 கனிம நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாக முதல-மந்திரி சித்தராமையா மீது சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்யவில்லை

கர்நாடகத்தில் தடை செய்யப்பட்டுள்ள வனப்பகுதிகளில் கனிம வளங்களை வெட்டி எடுக்க 8 கனிம நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக முதல்-மந்திரி சித்தராமையா அனுமதி அளித்திருப்பதாகவும், இவ்வாறு அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறி இருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் பெங்களூருவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கவுடா மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த முறைகேடு குறித்து ஊழல் தடுப்பு படை அல்லது லோக் அயுக்தாவில் புகார் அளிக்கும்படி கூறி ராமமூர்த்தி கவுடாவை அறிவுறுத்தியது. இதையடுத்து, 8 கனிம நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி அளித்தது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் தடுப்பு படை, லோக் அயுக்தாவில் ராமமூர்த்தி கவுடா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

சித்தராமையா மீது புகார்

இந்த நிலையில், சட்ட விரோதமாக 8 கனிம நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாகவும், இதில், ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதனால் முதல்-மந்திரி சித்தராமையா, தலைமை செயலாளர் மற்றும் 8 கனிம நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சி.பி.ஐ.யில் ராமமூர்த்தி கவுடா புகார் அளித்துள்ளார். அதே நேரத்தில் 8 கனிம நிறுவனங்களும் ஏற்கனவே சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதற்காக விசாரணையை எதிர் கொண்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுக்கே மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் ராமமூர்த்தி கவுடா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முதல்-மந்திரி சித்தராமையா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Next Story