கணவர் மறைவையொட்டி தஞ்சாவூர் சென்ற சசிகலா, ‘பரோல்’ முடியும் முன்பாகவே பெங்களூரு சிறைக்கு திரும்பினார்
கணவர் ம.நடராஜன் மறைவையொட்டி இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சசிகலா தஞ்சாவூருக்கு சென்றார்.
பெங்களூரு,
கணவர் ம.நடராஜன் மறைவையொட்டி இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சசிகலா தஞ்சாவூருக்கு சென்றார். ஆனால் ‘பரோல்’ முடியும் முன்பாகவே நேற்று அவர் சிறைக்கு திரும்பினார்.
பரோலில் சென்ற சசிகலா
சொத்துகுவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு கடந்த ஆண்டு(2017) அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அப்போது அவர் 5 நாட்கள் பரோலில் பெங்களூரு சிறையில் இருந்து சென்னைக்கு சென்றார். இந்த நிலையில், கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி அதிகாலையில் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
உடனே அன்றைய தினம் 15 நாட்கள் அவசர பரோலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தமிழ்நாடு தஞ்சாவூருக்கு செல்ல சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். இதனால் உடனடியாக அவர் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார். மேலும் பரோலில் சென்ற சசிகலாவுக்கு தஞ்சாவூர் மாவட்டம் பரிசுத்தம் நகரில் தங்கி இருக்க வேண்டும், அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, ஊடகங்களை சந்தித்து பேட்டி அளிக்கக்கூடாது என 3 நிபந்தனைகளுடன் சிறை அதிகாரிகள் ‘பரோல்’ வழங்கி இருந்தார்கள்.
சிறைக்கு திரும்பினார்
அதன்படி, ‘பரோல்’ நாட்களில் தஞ்சாவூரில் உள்ள பரிசுத்தம் நகரிலேயே சசிகலா தங்கி இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் கணவரை இழந்த சசிகலாவை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். இதற்கிடையில், ‘பரோல்’ முடிந்து நாளை மறுநாள்(அதாவது 3-ந் தேதி) பெங்களூரு சிறைக்கு சசிகலா திரும்ப வேண்டும். ஆனால் ‘பரோல்’ முடியும் முன்பாகவே சிறைக்கு திரும்ப சசிகலா முடிவு செய்தார். அதன்படி, நேற்று காலையில் தஞ்சாவூரில் இருந்து காரில் சசிகலா பெங்களூருவுக்கு புறப்பட்டார். பின்னர் நேற்று மதியம் 3.50 மணியளவில் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையை வந்தடைந்தார்.
பின்னர் அவர், காரில் இருந்து இறங்கி சிறைக்குள் சென்றார். அங்கு அவருக்கு முதலில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, அவரது அறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். மாலை 4.30 மணியளவில் டி.டி.வி.தினகரன், வக்கீல்களும் சிறைக்குள் சென்று சசிகலாவை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்தனர். முன்னதாக சசிகலாவுடன் நாகராஜ் எம்.பி., தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணி, முருகன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரங்கசாமி, பிரபு உள்ளிட்டோர் கார்களில் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு வந்திருந்தனர்.

Related Tags :
Next Story