தானேயில் 4 நேபாள கொள்ளையர்கள் கைது ரூ.20 லட்சம் நகை, பணம் பறிமுதல்


தானேயில் 4 நேபாள கொள்ளையர்கள் கைது ரூ.20 லட்சம் நகை, பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் கைது செய்யப்பட்ட 4 நேபாள கொள்ளையர்களிடம் இருந்து போலீசார் ரூ.20 லட்சம் நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

தானே,

தானேயில் கைது செய்யப்பட்ட 4 நேபாள கொள்ளையர்களிடம் இருந்து போலீசார் ரூ.20 லட்சம் நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

தானேயில் கொள்ளை

தானே மாவட்டம் தாக்குர்லி பகுதியை சேர்ந்தவர் ராம்தாஸ். இவர் சம்பவத்தன்று குடும்பத்தினருடன் புனே சென்று இருந்தார். அப்போது இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் ரூ.27 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராம்தாஸ் வீட்டில் கார் கழுவி வரும் கிசானுக்கு (வயது34) கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

4 நேபாளிகள் கைது

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் கொள்ளையர்கள் ராம்தாஸ் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் டோம்பிவிலி பகுதிக்கு வர உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், இதில் தொடர்புடைய ஜீவன் (25), ராஜூ (32), ஜீர்பகதூர் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனை வரும் நேபாளத்தை சேர்ந்த வர்கள் ஆவர். போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளையில் தொடர் புடைய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Next Story