திருப்பூரில் ரூ.10 லட்சத்துடன் வாலிபர் மாயம் போலீசார் விசாரணை


திருப்பூரில் ரூ.10 லட்சத்துடன் வாலிபர் மாயம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 April 2018 3:50 AM IST (Updated: 1 April 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ரூ.10 லட்சத்துடன் மாயமான வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருப்பூர், 

திருப்பூர் ராம்நகரில் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தின் மேலாளராக ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் பகுதியை சேர்ந்த அனுமன்(வயது 26) உள்ளார். இந்த அலுவலகத்தில் அரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த விகாஷ்குமார்(25) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று அனுமன், ரூ.10 லட்சத்தை விகாஷ்குமாரிடம் கொடுத்து சேலத்தில் சஞ்சய் சர்மா என்பவரிடம் கொடுத்து விட்டு வருமாறு கூறி திருப்பூர் ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து சென்ற விகாஷ்குமார் அதன்பிறகு திருப்பூர் திரும்பவில்லை. அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்துள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் விகாஷ்குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரூ.10 லட்சத்துடன் அவர் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அனுமன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விகாஷ்குமாரை தேடி வருகிறார்கள். 

Next Story