மரண துயரமும்.. மாபெரும் சாதனையும்
ஒவ்வொரு ஆண்டும் ஓட்டப்பந்தயத்தில் புதிய உலக சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறார் 102 வயதாகும் ஐடா ஹீலிங் என்ற பெண்மணி.
ஒவ்வொரு ஆண்டும் ஓட்டப்பந்தயத்தில் புதிய உலக சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறார் 102 வயதாகும் ஐடா ஹீலிங் என்ற பெண்மணி. வயோதிகத்தை விரட்டியடிக்கும் உற்சாகம் இவருடைய ஓட்டப்பந்தயத்தில் வெளிப்படுகிறது. அமெரிக் காவை சேர்ந்தவரான ஐடா 1915-ம் ஆண்டு பிறந்தவர். 67 வயது வரை உடற்பயிற்சியிலோ, ஓட்டப்பந்தயத்திலோ நாட்டம் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். இரு மகன்களின் எதிர்பாராத மரணம் வாழ்க்கை மீது விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மகன்களை இழந்த துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்காக தடகள பயிற்சி மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார். இவருடைய மகள் ஷெல்லி தடகள பயிற்சியாளர். அவர்தான் தாயாருக்கு பயிற்சி வழங்கி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
95 முதல் 99 வயது வரை உள்ள பிரிவிலும் 100 வயதுக்கு மேற்பட்ட பிரிவுகளிலும் தொடர்ச்சியாக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்து ஆச்சரியப்படுத்தி கொண்டிருக்கிறார், ஐடா. 2011-ம் ஆண்டில் 60 மீட்டர் தூரத்தை 29.86 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். அப்போது அவருக்கு 95 வயது. 2014-ம் ஆண்டில் 100 மீட்டர் பந்தய தூரத்தை 58.9 விநாடிகளில் எட்டிப்பிடித்து மீண்டும் சாதனை படைத்தார். 100 வயதை எட்டியபோது 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று அசத்தினார். அதன் மூலம் 100 வயதை கடந்த பிறகும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றார்.
‘உடற்பயிற்சியும், ஓட்டப்பந்தயமும்தான் உடலுக்கு சிறந்த மருந்து’ என்கிறார், ஐடா. இவர் வாரத்தில் 4 நாட்கள் சற்று கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் ஜிம்முக்கு சென்று தன்னுடைய உடல் எடையை வலுப்படுத்திக்கொண்டிருக் கிறார். 40 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதையும், பின்பு ஓட்டப்பந்தய பயிற்சி செய்வதையும் அன்றாட வழக்கமாக பின்பற்றிக்கொண்டிருக்கிறார். மகள் ஷெல்லி உடன் இருந்து பயிற்சிகளுக்கு உதவி செய்து தாயாரை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார். ‘ருசிக்காக ஒருபோதும் உணவு உட்கொள்வதில்லை. அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களுக்காகத்தான் சாப்பிடுகிறேன்’ என்கிறார், ஐடா.

Related Tags :
Next Story