மனமும்.. மூட்டும்..


மனமும்.. மூட்டும்..
x
தினத்தந்தி 1 April 2018 11:18 AM IST (Updated: 1 April 2018 11:18 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் மூட்டுவலியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

லக அளவில் மூட்டுவலியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் மூட்டு வலிக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோரை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 65 வயதை கடந்தவர்கள். வயதானவர்களாக இருந்தாலும் நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களில் பெரும்பாலானோர் மூட்டுவலி பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும்போது மூட்டுவலி ஏற்படுவது தவிர்க்கமுடியாதது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படுக்கைக்கு செல்லும்போதும், சாக்ஸ் அணியும்போதும், வெளியிடங்களுக்கு பயணம் செய்யும்போதும் மூட்டு வலியை உணர்வதாகவும், மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீங்கள் மூட்டுவலி இல்லாமல் வாழ வேண்டும் என்றால் மன அழுத்தம் இல்லாமல் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Next Story