மலைக்க வைக்கும் மலையேற்றக்கலை
உடலையும், உள்ளத்தையும் ஒருங்கிணைக்க உடற்பயிற்சிகள், தியானம், யோகாசனங்கள் வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றன.
உடலையும், உள்ளத்தையும் ஒருங்கிணைக்க உடற்பயிற்சிகள், தியானம், யோகாசனங்கள் வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றன. இதில் மலையேற்ற பயிற்சியும் ஒன்று. இதனை முறையாக மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் இயங்கும் மலையேற்ற குழுவினர் மலைபிரதேசங்களுடனான தங்கள் பந்தத்தை இணைபிரியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். திருச்சியிலும் மலையேற்ற குழுவினர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் களது பயிற்சி நடப்பது நமது மாநிலத்தில் உள்ள மலைகளில் அல்ல. இமயமலையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த மலையேற்ற குழுவில் முக்கிய அங்கம் வகிக்கிறவர்கள், ரமணன்-விருந்தா தம்பதியினர். இவர்கள் திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள். ரமணன், கட்டிடக்கலை நிபுணர். விருந்தா, பரதநாட்டிய கலைஞர். இந்த தம்பதியர் அறிவியல் சாகச குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி மலையேற்ற பயணத்தை வழிநடத்தி வருகிறார்கள். குரங்கணி சம்பவம் ஏற்படுத்திய வேதனையும் இந்த தம்பதியரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
மலையேற்ற பயிற்சியின்போது எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை தவிர்க்க செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? என்பவை பற்றி ரமணா - விருந்தா தம்பதியர் விவரிக்கிறார்கள்:
‘‘மலையேற்ற பயிற்சி வழங்கும் டிரெக்கிங் கிளப்புகள் இப்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இந்த கிளப்புகள் எல்லாம் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை நன்கு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மலையேற்றம் மேற்கொள்வது சாதாரண காரியம் அல்ல. உடலும், மனதும் திடமாக இருக்க வேண்டும். உடல் வலிமை, மன வலிமை இல்லாதவர்கள் மலையேற்ற பயிற்சிக்கு செல்ல முடியாது. நாங்கள் பல வருடங்களாக மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டு வருகிறோம். ஏராளமானவர்கள் எங்களுடன் வந்து பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்கள்.
மலையேற்ற பயிற்சிக்கு செல்பவர்களை நாங்கள் தேர்வு செய்து அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிப்போம். அந்த பயிற்சியில் அவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் இமயமலைக்கு அழைத்து செல்வோம். இதற்காக திருச்சி பொன்மலையில் சிறுசிறு பயிற்சிகளை வழங்குகிறோம். அதில் எந்த அளவுக்கு அவர்கள் ஆர்வம் காண்பிக்கிறார்கள்? அவர்களுடைய உடல்நிலையும், மனநிலையும் ஒத்துழைக்கிறதா? என்பதை அவர்களுடைய நடவடிக்கைகளை பார்த்து தீர்மானித்துவிடுவோம்’’ என்கிறார்கள்.
மலையேற்றத்தை ஒருசிலர் பொழுதுபோக்கு நிகழ்வாக பார்க்கிறார்கள் என்பது இந்த தம்பதியரின் கருத்தாக இருக்கிறது. விளையாட்டுபோக்கான மனநிலையில் நிறைய பேர் மலையேற்றம் மேற்கொள்வதாகவும் ஆதங்கப்படுகிறார்கள்.
‘‘மலையேற்ற பயிற்சி என்பது ஜாலியாக இன்ப சுற்றுலா மேற்கொள்ளும் நிகழ்வு அல்ல. இந்த உண்மையை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. இப்போது பல இடங்களில் மலையேற்றத்தை ஜாலி டூராகவே கருதி செல்கிறார்கள். காட்டுப்பகுதியில் எதிர்பாராமல் நடக்கும் எதையும் சந்திக்கும் தைரியம், மன வலிமை மலையேற்ற குழுவினருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தெரிந்து இருக்க வேண்டும். மலையேற்ற குழுவை வழிநடத்தி செல்பவரின் உத்தரவை மதித்து அவர் வழியை பின்பற்றி நடக்க வேண்டும். முக்கியமாக மன ஒற்றுமை அனைவருக்கும் இருக்க வேண்டும்.
மலையேற்ற பயிற்சியினால் உடலும், மனதும் ஒன்றாகி விடும். உடலுக்கு நல்ல பயிற்சி கிடைப்பதோடு காட்டில் இருக்கும் நாட்களில் எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். அது வாழ்க்கையில் பிரதிபலிக்கும். இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கவும் உதவும். மன அமைதி, ஒழுக்கம், பிறர் மீது அக்கறை கொள்ளுதல், தன்னம்பிக்கை உள்ளிட்ட அனைத்து குணங்களும் வந்து விடும். கரடுமுரடான மலைப்பகுதிகளை கடந்து செல்பவர்கள் வாழ்க்கையின் கஷ்டமான பாதைகளையும் எளிதில் கடந்து சென்றுவிடுவார்கள். மலையேற்ற பயிற்சி அவர்களுக்கு கைகொடுக்கும்’’ என்கிறார்கள் இந்த தம்பதியினர்.
மலையேற்ற பயிற்சி குறித்து இவர்கள் சொல்லும் தகவல்கள்:
மலையேற்ற பயிற்சிக்கு கோடை காலத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். முதலில் மலையேற்றத்துக்கு அழைத்து செல்பவர்களின் பின்னணியை அறிந்து கொள்ள வேண்டும். அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி மிக முக்கியம். அதே போன்று சுயஒழுக்கமும் அவசியம். குழுவை வழிநடத்தி செல்பவர் இடும் கட்டளையை ஏற்று அதன்படி நடக்க வேண்டும். பெரும்பாலும் மலையேற்றம் என்றால் நடைபாதை போன்று ஒருவர் பின் ஒருவராக பின்தொடர்ந்து செல்ல நேரிடும். அந்த சமயத்தில் அனைவருக்கும் பொறுமை இருக்க வேண்டும். முன்னால் செல்பவர் திரும்பி பார்க்கும் போது கடைசி நபர் தெரியும் வரை அனைவரும் ஒருசேர பின் தொடர்ந்து செல்ல வேண்டும். மேலும் மலையேற்ற குழுவில் யார் மெதுவாக நடப்பவர் என்பதை அறிந்து அவரை முன்னால் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும். அவருக்கு பின்னால்தான் மற்றவர்கள் செல்ல வேண்டும். காட்டுக்குள் வழி தவறி சென்றுவிடக்கூடாது.
மலையேற்றம் செல்பவர்கள் கண்டிப்பாக முதலுதவிக்கான மருந்துகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். அது தவிர குடிநீர், டார்ச்லைட், எண்ணெய் இல்லாத உணவு வகைகளை எடுத்து செல்வது நல்லது. மலையேற்ற குழுவினருடன் ஒரு டாக்டரும் செல்ல வேண்டும்.
மலைப்பகுதியில் பயணிக்கும் போது அமைதியாக செல்ல வேண்டும். சத்தமிட்டுக்கொண்டு சென்றால் அரிய வகை உயிரினங்களை பார்க்க முடியாமல் போய்விடும். சிறிய பட்டாம்பூச்சி முதல் பல்வேறு வகையான காட்டு உயிரினங்களை பார்க்கும் வாய்ப்பை இழப்போம். மலையேற்றத்துக்கு அமைதிதான் அவசியமானது. மலைப்பகுதியில் தண்ணீர் தென்பட்டால் உடனே அதில் இறங்கி குளிக்க வேண்டும் என நினைக்கக்கூடாது. அந்த இடத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
இமயமலைக்கு சென்று மலையேற்றம் பயிற்சி செய்யும் அனுபவம் திரில்லாகத்தான் இருக்கும். இமயமலை நமது நாட்டின் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இமயமலை சுமார் 1500 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக கூறப்படுகிறது. நாங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று விட்டு திரும்புவது வழக்கம். கடந்த முறை 14 ஆயிரம் அடி உயரம் கொண்ட சிகரம் வரை சென்று திரும்பினோம்.

Related Tags :
Next Story