செவ்வாயில் ‘கியூரியாசிட்டி’யின் 2 ஆயிரம் நாட்கள்
செவ்வாய்க் கிரகப் பரப்பில் பயணித்த அமெரிக்கா ‘நாசா’ வின் ‘கியூரியாசிட்டி’ ரோவர், 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்திருக்கிறது.
கியூரியாசிட்டி ரோவரின் சாதனைகளாக நாசா விஞ்ஞானிகள் குழுவினர் சிலவற்றைத் தெரிவித்திருக்கின்றனர். அவை பற்றி...
விண்வெளியின் பல்வேறு இடங்களில் இருந்து பூமி படம் எடுக்கப் பட்டுள்ளது. ‘கியூரியாசிட்டி’யால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், செவ்வாயின் இரவு வானில் பூமி ஓர் ஒளிக்கீற்றுப் போலத் தெரிகிறது. சிவப்பு கிரகமான செவ்வாயை, 10 கோடி மைல்களுக்கு அப்பால் பூமியில் இருந்து தினமும் விஞ்ஞானிகள் அறிகின்றனர்.
நாசா விஞ்ஞானிகள் மேலும் கூறுகையில், கியூரியாசிட்டி ரோவரை இயக்கத் தொடங்கியதும், நாங்கள் கூழாங்கற்கள் நிறைந்த பகுதியை பார்த்தோம். அக்கற்களின் உருளையான உருவம், பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆழமற்ற நதியொன்றில் இருந்து உருவானது என்பதை அறிந்தோம்.
கியூரியாசிட்டியின் மாஸ்ட்கேம் எடுத்த ஒரு புகைப்படத்தில் கூழாங்கற்களை மிகவும் அருகாமையில் பார்க்க முடிந்தது. நம் எண்ணங் களுக்கு மிகவும் எதிர்மறையாக, இந்த கற்களின் மேற்பகுதி கருப்பாகவும், பழங்காலத்தைச் சேர்ந்ததாகவும் இல்லை. இவை, தங்களின் கலவைகளிலும், கனிமங்களிலும் மிகவும் பரிணாமம் அடைந்திருந்தன. இந்த கூழாங்கற்கள் என்பது, செவ்வாய்க் கிரகத்தின் மேல் ஓடுகள் என்பது எவ்வாறு உருவாகி இருக்கும் என்ற நமது கருத்துகளை மீண்டும் யோசிக்கவைக்கும் வகையில் அமைந்திருந்தன.
செவ்வாய்க் கிரகத்தின் கேல் ஏரிப் பகுதிகளில் இருந்த பாறைகள் குறித்த மிகவும் தெளிவான ஆய்வை கியூரியாசிட்டி நிகழ்த்தியது. இதற்காக, தனது செம்கேம் லேசர் மற்றும் தொலைநோக்கியை அது பயன்படுத்தியது. அங்கு பழங்கால களிமண் பாறைகளையும், சல்பேட் படிவுகளையும் நாங்கள் பார்த்தோம்.
பூமியில் நதிகள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வறண்டு, வெடிப்புகள் ஏற்படுவதை நம்மால் பார்க்க முடியும். செவ்வாயில் உள்ள கேல் ஏரியிலும் அதே நிலை உள்ளது. பாறைகள் மீது எங்கெல்லாம் நாம் லேசர் கதிர்களை செலுத்தினோமோ, அங்கெல்லாம் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதை நம்மால் பார்க்க முடியும். அப்போது வெளிப்படும் ஒளிக்கதிர்கள் அந்தக் களிமண் பாறைகளின் கலவை என்ன என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க் கிரகத்தை பொறுத்தவரை எப்போதாவது நம்மால் சில மேகங்கள் விண்ணில் இருப்பதை பார்க்க முடிகிறது. அத்தகைய படங்களை கியூரியாசிட்டி அனுப்பியிருக்கிறது.
கியூரியாசிட்டி ரோவர், தான் எடுத்த பல செல்பி புகைப்படங்களால் தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் பெயர் வாங்கியது. இவை, அந்த ரோவரின் பெருமையை காட்டிக்கொள்ளும் விஷயமாக மட்டும் இல்லாமல், ரோவரின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நாசா குழுவினர் அறிந்துகொள்ளவும் உதவியது.
கியூரியாசிட்டியின் சுய புகைப்படங்கள் அனைத்தும், அதன் ‘கைகளில்’ இருந்த கருவியான எம்.ஏ.எச்.எல்.ஐ. மூலமாக எடுக்கப்பட்டவை.
அந்த புகைப்படங்களில் ஒன்றில், ரோவரின் மீதுள்ள கெம்கேம் தொலைநோக்கியையும், மாஸ்ட்கேம் காமிராக் களையும் பார்க்க முடிகிறது. தரையிலும், அப்போதுதான் கியூரியாசிட்டி துளையிட்டதையும் அதனால் வெளிவந்துள்ள துகள்களையும் பார்க்க முடிகிறது.
இன்னும் கியூரியாசிட்டி ரோவர் என்னென்ன புகைப் படங்களை அனுப்புகிறது என்று நாசா அணி ஆர்வத்தோடு கவனித்து வருகிறது.

Related Tags :
Next Story