தினம் ஒரு தகவல் : கூகுளின் ஸ்மார்ட் கேமரா
இந்த கேமராவில் சின்னஞ்சிறிய லென்ஸ் மட்டுமே இருகிறது. வியூபைண்டர் கிடையாது. எனவே, இதைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
வீட்டில் எங்கேயாவது ஒரு மூலையில் தொங்கவிட்டால் போதும், அது தானாகப் படம் எடுத்துக்கொள்ளும். அது மட்டுமல்ல, தான் பார்க்கும் முகங்களை நினைவில் நிறுத்திக்கொள்ளும் ஆற்றலும் கொண்டிருக்கிறது. ஆக, நாளடைவில் இது முகங்களை நன்றாகப் பரிச்சயம் செய்துகொண்டு, அறிமுகம் இல்லாதவர்களைப் படம் எடுப்பதைத் தவிர்க்கவும் கற்றுக்கொண்டுவிடும்.
மற்றபடி வீட்டில் இருக்கும் போது, சுவாரசியமான தருணங்கள் எனக் கருதப்படும் காட்சிகளை அது படம் எடுத்தபடி இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஏழு நொடிகள் ஓடக்கூடியதாக இருக்கும். இவற்றிலிருந்து தேவையான காட்சியைத் தேர்வு செய்து ஒளிப்படமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படியே தொடர் படமாகவும் பயன்படுத்தலாம். ஆனால், ஒலி வசதி கிடையாது. எனவே, வீடியோ என்று சொல்ல முடியாது.
கேமராவுடன் இணைக்கப்பட்ட பிரத்யேகச் செயலி மூலம் ஸ்மார்ட்போனில் படங்களைப் பார்க்கலாம். அதிலேயே சேமித்துக்கொள்ளலாம். தேவையெனில் கையாலும் படமெடுக்கலாம். இதற்கான ஷட்டர் வசதி இருந்தாலும், இந்த கேமராவை அதன் போக்கில்விடுவது தான் சிறந்தது. உதாரணத்துக்கு குழந்தைகள் உள்ள வீட்டில் கேமராவை ஒரு மேஜையில் பொருத்திவிட்டால், குழந்தைகளின் குறும்புகளும், மந்தகாசமான புன்னகைகளும் அழகாகப் பதிவாகியிருக்கும். பெற்றோர் அருகே இல்லாவிட்டால்கூட, கேமரா கச்சிதமாகக் குழந்தையின் பொன்னான தருணங்களைப் பதிவு செய்துகொள்ளும். சும்மா இல்லை. 130 கோணங்களில் காட்சிகளைப் படமெடுக்கும். செல்லப் பிராணிகள் மீது பாசம் கொண்டவர்களும் இந்த கேமராவைப் பயன்படுத்தலாம்.
சுற்றுப்புறத்தைப் புரிந்துகொண்டு, அதில் தென்படும் முகங்களை உணர்ந்து, தானாகப் படமெடுக்கும் கேமரா, தானாகப் படமெடுக்கும்போது சிக்கக்கூடிய அற்புதமான தருணங்களை நினைத்துப் பார்த்து வியக்க வைத்தாலும், இன்னொரு புறம் இது அந்தரங்கத்தின் மீதான ஊடுருவல் என்ற அச்சத்தை உருவாக்குகிறது. கூகுள் இதை உணராமல் இல்லை. அதனால்தான் கேமரா என்று எல்லோரும் உணர்ந்துகொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து வெளியாகும் சிவப்பு ஒளி கேமரா படமெடுத்துக் கொண்டிருப்பதை உணர்த்தும் என்பதால், எதிரே இருப்பவர்கள் அறியாமல் படமெடுக்கப்படும் அபாயம் இல்லை. தவிர, இதன் பயன்பாடு பெரும்பாலும் வீட்டுச் சூழலில் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பும் மாறுபட்டதாகவே இருக்கும். இந்த கேமரா அதன் உரிமையாளருக்கே விசுவாசமாக இருக்கும். வீட்டில் தெரிந்த முகங்களுக்குப் பழகி, அவர்களைப் படமெடுக்கவே முற்படும். பூங்காவில் சென்று அமர்ந்திருக்கும் போதுகூட, மற்ற குழந்தைகளை விட்டு, உரிமையாளர் குழந்தையின் விளையாட்டையே இது பதிவு செய்ய முற்படும். எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்யும் மாயம்.

Related Tags :
Next Story