எப்படி கிடைக்கும் மகிழ்ச்சி?
காலை எழும்போது மனதில் மகிழ்ச்சி துள்ள வேண்டும் என்றால், உடல் நலமுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் குளியல், அலங்காரம், உணவு போன்றவற்றை மகிழ்ந்து அனுபவிக்க இயலும்.
குழந்தை, மனைவி, பெரியவர்களிடம் மனமுவந்து அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
மகிழ்ச்சி எப்படி கிடைக்கும்? ஆரோக்கியமே மகிழ்ச்சி தரும். எத்தனை பெரிய வெற்றி கிடைத்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது.
சரி, ஆரோக்கியம் எப்படி கிடைக்கும்? இயற்கையுடன் இணைந்து வாழ்வதைத் துறந்து, மருந்து, மாத்திரைகளில் ஆரோக்கியம் கிடைக்கும் என்ற அறியாமை நோயில் மக்கள் தவிக்கிறார்கள். உணவு, உண்ணும் முறை, நீர் பருகல் ஆகிய மூன்றில்தான் உண்மையான ஆரோக்கியம் மறைந்திருக்கிறது.
கண் இமைக்காமல் அலைபேசியுடன் அரை மணி நேரம் உறவாட நேரம் ஒதுக்குபவர்களுக்கு சாப்பிட மட்டும் நேரம் கிடைப்பதில்லை. தொலைக்காட்சி பார்த்தபடி அல்லது பேசிக்கொண்டு சாப்பிடுவது முதல் தவறு. உணவுடன் சேர்த்து தண்ணீர் அல்லது குளிர்பானம் குடிப்பது இரண்டாவது தவறு. சாப்பிட்டதும் ஐஸ் க்ரீம், அசைவத்துடன் தயிர் போன்ற பொருந்தா உணவுகள் சாப்பிடுவது மூன்றாவது தவறு. சுருக்கமாக, நம் முன்னோர் சொல்லை மறந்தது மிகப்பெரும் தவறு.
‘மென்று தின்றவன் நின்று வாழ்வான்’, ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற நம் முன்னோர் வார்த்தைகள் சாதாரண சொற்கள் அல்ல. அவை வாழ்வியல் நெறி.
வாயில் உற்பத்தியாகும் உமிழ்நீருக்கு மட்டுமே உணவை ஜீரணிக்கும் திறன் உண்டு. அதனால் உணவை மென்று தின்பதற்கு போதிய நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு கவளம் உணவை 32 முறை அல்லது அது திரவமாகும் வரை மென்று அதன்பிறகே உணவுக் குழாய்க்குள் அனுப்ப வேண்டும். காளான், மாமிசம் போன்ற உணவுகளை 60 அல்லது 70 முறை மெல்ல வேண்டும். திரவமாகாத எந்த ஒரு திடப்பொருளும் வயிற்றுக்குள் செல்லக்கூடாது.
உணவு திரவநிலையில் வயிற்றுக்குள் செல்வதால், தண்ணீர் குடிக்கும் அவசியம் ஏற்படாது. உணவை உமிழ்நீர் கலந்த திரவமாக இரைப்பைக்குள் அனுப்பினால் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. சர்க்கரை, தைராய்டு, கொழுப்பு போன்ற 100-க்கும் மேற்பட்ட நோய்கள் உருவாக மலச்சிக்கல் மட்டுமே ஆரம்ப காரணியாக இருக்கிறது.
‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று நம் முன்னோர் சொன்னது 16 வகையான செல்வங்களை அல்ல. நமது வாயில் 27 வகையான உமிழ்நீர் சுரக்கிறது. அவற்றில் 16 வகையான உமிழ்நீர் ஜீரணத்துக்கு உதவிகரமாக இருக்கின்றன. அந்த 16 வகையான உமிழ்நீருடன் உணவை மென்று தின்பவர்கள் வாழ்க்கை சுகமாக அமையும் என்பதைத்தான் பெருவாழ்வு என்று சொல்லி வைத்தார்கள்.
தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் நேரம் செலவிடுபவர்கள், வாழ்வின் மிகமுக்கியமான ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்குவதை விமர்சிக்கும் அறியாமை நோயில் சிக்கியிருக்கிறார்கள். வாழ்க்கையில் ஆரோக்கியமில்லாத கல்வி, செல்வம், பதவி எல்லாமே வீண் என்பதை உணரவேண்டும்.
காலை உணவு எடுக்காமல் நேரடியாக மதிய உணவு சாப்பிடுவது, இரவு 11 மணிக்கு மேல் சாப்பிடுவது போன்ற ஆபத்தான பழக்கம் பலரிடம் இருக்கிறது. நம் உடல் கெடிகாரத்திற்கும் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் ஒவ்வொரு உறுப்பும் ஆதிக்கம் செலுத்தும் நேரம் அறிந்து உணவு எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
காலை 7 மணி முதல் 8 மணி வரை வயிற்றின் நேரம் என்பதால் இந்த நேரத்துக்குள் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறுகுடலின் நேரம் என்பதால் இந்த நேரத்திற்குள் மதிய உணவு சாப்பிட வேண்டும். இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடித்திருக்க வேண்டும்.
கைக்குத்தல் அரிசி, சிறு தானியங்கள், பயிறுகள் உணவில் முதன்மையாக இருக்க வேண்டும். சாப்பிட்டதும் பழச்சாறு, ஐஸ்க்ரீம் போன்றவை கூடாது. சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரும் பின்னரும் எதுவும் சாப்பிடக் கூடாது. இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது. முளை கட்டிய பயிறுகள், பழங்கள் போன்ற விவசாய உற்பத்தி பொருட்களை மட்டுமே நொறுக்குத்தீனியாக எடுக்க வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் கிடைப்பதுடன், விவசாயப் பொருட்கள் விற்பனையாகி அவர்கள் வாழ்க்கையும் வளமாகும்.
உணவு போன்று உறக்கமும் ஆரோக்கியத்திற்கு அவசியம். மனித உடல் கெடிகாரம் இரவு தூங்குவதற்காக மட்டுமே படைக்கப்பட்டது. அதனால் இரவு 11 மணிக்குள் தூங்கிவிட வேண்டும். தலையணை இல்லாமல் பாயில் படுப்பது முதுகுத்தண்டுக்கு நல்லது. ஆண்கள் இடதுபக்கம் ஒருக்களித்தும், பெண்கள் வலதுபக்கம் ஒருக்களித்தும் படுத்தால் ஆரோக்கியமான தூக்கம் வரும். அதிகாலை 4, 5 மணிக்கு காற்றில் ஓசோன் அதிகம் இருக்கும் நேரத்தில் எழுந்து மூச்சுப்பயிற்சி, தியானம், உடற்பயிற்சி செய்தால் நுரையீரல் பலம் பெறும். அதேபோன்று பெருங்குடலின் நேரமான 7 மணிக்குள் காலைக்கடன்களை முடித்துவிட்டால் உடல் சுத்தமாகும்.
ரத்த சிவப்பணுக்கள் எனப்படும் ஹீமோகுளோபின் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்புக்கும் அடிப்படையாகும். ஹீமோகுளோபின் அளவு 16-க்கு மேல் இருக்கும் வகையில் உணவுப் பழக்கம் அமைய வேண்டும். பேரீட்சை, பாதாம் போன்றவற்றை தினமும் 5 மட்டும் எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் கிடைத்துவிடும்.
நான் 1990-ம் ஆண்டு முதல் இன்று வரை இயற்கை உணவையும், கெடுதல் இல்லாத சமைத்த உணவையும் மட்டுமே எடுத்து வருகிறேன். பொருந்திய உணவு, பொருந்தா உணவு ஆகியவற்றை ஆய்வுசெய்து கடைப்பிடிக்கிறேன். இயற்கையுடன் இணைந்து வாழ்வதால் நோயின்றி வாழ்வதுடன் தினமும் 19 மணி நேரம் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறேன்.
சித்தர் பெருமகன் திருமூலர் சொன்னதுபோல், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...!
- சைதை துரைசாமி, முன்னாள் மேயர், சென்னை மாநகராட்சி

Related Tags :
Next Story