மத்திய அரசை கண்டித்து சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியல் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 270 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த மறுத்தும் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பெரம்பலூர் நகரச்செயலாளர் ரவி தலைமை தாங்கினார். நகர தலைவர் கதிர்வேல், அமைப்பாளர் மணி, பொருளாளர் சங்கர், பெரியசாமி, சக்திவேல், மோகன்ராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்தும் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதேபோல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போராட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். மங்களுர் ஒன்றிய செயலாளர் ரெங்க சுரேந்தர், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், மகளிரணி செயலாளர் கற்பகம் உள்பட 170-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
270 பேர் கைது
இதையடுத்து பெரம்பலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், மங்களமேடு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சங்கர் தலைமையிலான போலீசார் மற்றும் குன்னம் தாசில்தார் தமிழரசன், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 270 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்த அனைவரையும் மங்களமேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story