சதுரகிரி மலையில் பயங்கர தீ: விடிய, விடிய தவித்த பக்தர்கள் 3,500 பேர் மீட்பு
சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் சென்றிருந்த நிலையில் மலையில் காட்டுத்தீ பரவியது. வனத்துறையினரும் தீயணைப்பு படையினரும் நீண்ட நேரம்போராடி தீயை கட்டுப்படுத்தினர். கோவிலில் விடியவிடிய தவித்த 3,500 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சமீபத்தில் குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் நேற்றுமுன் தினம் இரவு தீப்பிடித்தது. அங்கு கோவிலுக்கு சென்றிருந்த பக்தர்களை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று இங்கு சாமியை தரிசனம் செய்ய வேண்டும். இங்கு எப்போதும் பக்தர்கள் சென்று வரலாம் என முன்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு நேர்ந்ததை தொடர்ந்து மலைக்கு செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதன்படி மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை யொட்டி 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் வானிலையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்களை திருப்பி அனுப்புவதும் உண்டு. தற்போது பவுர்ணமியையொட்டி பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியிருந்தார்கள். நேற்று முன்தினம் 3,500 பக்தர்கள் மலையில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த சூழலில் அடிவாரத்தில் மாவூத்து எனப்படும் 5-ம் எண் பீட்டில் நள்ளிரவு தீப்பிடித்தது. கோரைப்புற்களில் பரவிய தீ மளமளவென பற்றி எரிந்தது. இந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டனர். தீப்பிடித்த இடம் பக்தர்கள் வரும் வழி இல்லாதபோதிலும் முன் எச்சரிக்கையாக கோவிலில் இருந்த பக்தர்கள் யாரும் கீழே வரவேண்டாம் என வயர்லெஸ் மூலம் உத்தரவிட்டனர். மேலும் தீயை அணைக்கவும் ஏற்பாடு நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வர வழைக்கப்பட்டனர். மலைவாழ் மக்கள் துணையுடன் வனத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இலைதழைகளைக்கொண்டு நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தார்கள். பயங்கர காட்டுத்தீ காலையில் கட்டுக்குள் வந்தது.
தீ முழுமையாக கட்டுக்குள் வந்ததும் பக்தர்கள் கீழே வர அனுமதி வழங்கப்பட்டது. விடியவிடிய தவித்தவர்களில் முதற்கட்டமாக 3,400 பேர் காலை 11.30 மணி அளவில் பத்திரமாக திரும்பினார்கள். அடுத்த கட்டமாக மீதமுள்ள 100 பேரும் அடிவாரம் வந்தடைந்தனர்.
இந்த சம்பவத்தைதொடர்ந்து நேற்று மலைக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி தரவில்லை. இந்த நிலையில் சதுரகிரி மலை 6- வது பீட்டில் நேற்று பகலில் தீப்பிடித்தது. அதனை அணைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே பஞ்சந்தாங்கி மலைப்பகுதியில் யானைகஜம் தெற்குபீட் என்னுமிடத்தில் நேற்று முன் தினம் மதியம் திடீரென்று தீப்பிடித்தது. வருசநாடு வனச்சரகர் இக்பால் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாகின.
காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் தீ அந்த பகுதியில் பரவ தொடங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியில் இருந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 2 மணி வரை போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இதில் சுமார் 2 எக்டேர் பரப்பளவில் இருந்த புற்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து வருசநாடு வனச்சரகரிடம் கேட்டபோது, ‘பஞ்சந்தாங்கி மலைப்பகுதிக்கு அருகில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சதுரகிரி மலைப்பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் சாப்டூர் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அருகில் உள்ள பஞ்சந்தாங்கி மலைப்பகுதிக்கும் பரவியது. இதுபோன்று பஞ்சந்தாங்கி மலைப்பகுதியில் அவ்வப்போது தீ பரவி வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மலைப்பகுதியை தொடர்ந்து கண்காணிக்கிறோம் என்றார்.

Related Tags :
Next Story