காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 5-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 5-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 April 2018 4:15 AM IST (Updated: 2 April 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 5-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்துள்ளது.

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்கவேண்டுமென தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மத்திய அரசின் இந்த அலட்சியப்போக்கு தமிழகம், புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் குறித்த அக்கறையின்மையையே காட்டுகிறது. மத்திய அரசின் துரோக செயலையும், தமிழகம், புதுச்சேரி அரசின் அக்கறை இன்மையையும் கண்டித்து புதுச்சேரி மாநில விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு புதுச்சேரியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது புதுச்சேரி மாநில மக்களின் உரிமைகளை பெறுவதற்கான முதல் கட்ட போராட்டமாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜாங்கம் கூறியுள்ளார். 

Next Story